/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துர்நாற்றத்துடன் குடிநீர் 'சப்ளை'
/
துர்நாற்றத்துடன் குடிநீர் 'சப்ளை'
ADDED : ஜூலை 10, 2024 08:32 PM
சேலையூர்:தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், 45வது வார்டு, சேலையூர், ஐ.ஓ.பி., காலனியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதிக்கு, வாரத்திற்கு இரண்டு முறை, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்தனர்.
தண்ணீர் வந்தும், அதை குடிக்க முடியாததால், மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தினர். வழியின்றி, பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கினர்.
இது தொடர்பாக, மாநகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரும், துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.