/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு டி.ஆர்.ஓ., டோஸ்
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு டி.ஆர்.ஓ., டோஸ்
ADDED : ஜூலை 05, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர், பொன்விளைந்தகளத்துார் ஆகிய உள்வட்டங்கள் உள்ளன.
தாலுகா பகுதிகளில் வசிப்போர் வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பிரித்தல் உள்ளிட்டவை கோரி, வருவாய்த் துறையினரிடம் மனுக்கள் அளிக்கின்றனர்.
அவற்றின் மீது, குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், மனுக்கள் கிடப்பில் உள்ள பகுதி களின் கிராம நிர்வாக அலுவலர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, நேற்று தாலுகா அலுவலகம் வரவழைத்து, தாமதம் குறித்து விசாரித்து, அவர்களை எச்சரித்தார்.