/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் ஒழிப்பு மாணவர்கள் விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஆக 30, 2024 12:35 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியில் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்குகிறது.
நேற்று, கல்லுாரியில் பயிலும் மாணவ- - மாணவியருக்கு, செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, கல்லுாரி மாணவ- - மாணவியர், கல்லுாரியில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வரை, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பேரணியாக சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் அமுதா தலைமையில், கல்லுாரியின் முதல்வர் சுபத்ரா மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.