/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகற்றிய நிழற்குடைகள் அமைக்காததால் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் அவதி
/
அகற்றிய நிழற்குடைகள் அமைக்காததால் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் அவதி
அகற்றிய நிழற்குடைகள் அமைக்காததால் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் அவதி
அகற்றிய நிழற்குடைகள் அமைக்காததால் ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் அவதி
ADDED : ஆக 11, 2024 02:29 AM

கூடுவாஞ்சேரி:பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் இருந்த நிழற்குடைகள், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டன.
அதன்பின், விரிவாக்கப் பணிகள் முடிந்தும், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில், சாலையின் இருபுறமும் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், நிழற்குடை அமைக்கப்படாத பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த பயணியர், மழையிலேயே நின்று, பேருந்து பிடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்காமல், மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால், பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணம் செய்யும் பயணியர் சிரமம் அடைகின்றனர். எனவே, வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.