/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷனில் துவரை, பாமாயில் இம்மாதம் முழுதும் வினியோகம்
/
ரேஷனில் துவரை, பாமாயில் இம்மாதம் முழுதும் வினியோகம்
ரேஷனில் துவரை, பாமாயில் இம்மாதம் முழுதும் வினியோகம்
ரேஷனில் துவரை, பாமாயில் இம்மாதம் முழுதும் வினியோகம்
ADDED : ஜூலை 14, 2024 12:58 AM
செங்கல்பட்டு:ரேஷன் கடைகளில், ஜூன் மாதம் மானிய விலை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 4,37,509 குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதந்தோறும் தலா, 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, அவற்றின் ஒப்பந்தப்புள்ளி முடிவெடுப்பது, கொள்முதல் செய்வது தாமதமானது.
இந்நிலையில், ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை முதல் வாரத்தில் பெறலாம் என, உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர், சட்டசபை மானிய கோரிக்கையில்அறிவித்து இருந்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த மாதம் வாங்காத அட்டைதாரர்கள், இம்மாதம் முழுதும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.