/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அமந்தங்கரணை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை
/
அமந்தங்கரணை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை
அமந்தங்கரணை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை
அமந்தங்கரணை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை
ADDED : மே 30, 2024 01:07 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பாஞ்சாலி அம்மனுக்கு பாரத திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.
இந்த ஆண்டும், பாரத திருவிழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். பாரத திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மாலை மகாபாரத சொற்பொழிவு நடந்து, வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுனன் தபசு, கர்ணன் மோட்சம் போன்ற கட்டை கூத்து நாடகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று மதியம் 1:30 மணியளவில், பாரத திருவிழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக கோவில் அருகே களிமண்ணால், 25 அடி துரியோதனன் சிலை செய்து வைத்து, பஞ்ச வர்ணம் பூசி, நாடக நடிகர்கள் பீமன்,- துரியோதனன் வேடமிட்டு, மஹாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சியை தத்ரூபமாக நடித்தனர்.
பின், கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமந்தங்கரணை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.