/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புழுதி பறக்கும் சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
புழுதி பறக்கும் சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 28, 2024 06:30 AM

மறைமலை நகர் : செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை, 41 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, 75 சதவீதம் பணிகளுக்கு மேல் நிறைவடைந்து உள்ளது. திம்மாவரம், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த சாலையில், திம்மாவரம் மின் வாரிய அலுவலகம் உள்ள பகுதியில், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடத்தில், புழுதி அதிக அளவில் பறப்பதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த இடத்தில், சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையில் புழுதி பறப்பதை தடுக்க, பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் ஊற்றவும், மின் வாரிய அலுவலகம் எதிரே, சாலையில் படிந்து கிடக்கும் மண் திட்டுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.