/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஈசான்ய' மூலை பிரசாரம் தொடரும் 'சென்டிமென்ட்'
/
'ஈசான்ய' மூலை பிரசாரம் தொடரும் 'சென்டிமென்ட்'
ADDED : மார் 29, 2024 09:11 PM
மாமல்லபுரம்:ஓரிடத்தின் 'ஈசான்ய' மூலை என குறிப்பிடப்படும் வடகிழக்கு பகுதியிலிருந்து ஒரு செயலை துவக்கினால், நமக்கு சாதகமான பலனளிக்கும்என்பது, ஹிந்து மத நம்பிக்கை.
காஞ்சிபுரம் லோக்சபாதொகுதி மற்றும் திருப்போரூர் சட்டசபை தொகுதிகளுக்கு, கடலோர கானத்துார் பகுதியே, 'ஈசான்ய' மூலையாக உள்ளது.
எனவே, ஹிந்து மத சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ள வேட்பாளர்கள்,கானத்துார், ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியிலிருந்தே, பிரசாரத்தைதுவக்குவது வழக்கம்.
செங்கல்பட்டு லோக்சபா தொகுதியாக இருந்தபோது, முன்னாள் பா.ம.க., - எம்.பி.,யும், அப்போதைய ரயில்வே இணையமைச்சருமான ஏ.கே.மூர்த்தி, கானத்துார்பகுதியில் இருந்தே பிரசாரத்தை துவக்கினார்.
அதேபோல், காஞ்சி புரம் லோக்சபா தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., விஸ்வநாதன்உள்ளிட்ட பலர், கானத்துார் பகுதியிலேயேதங்களின் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர்.
தற்போதைய தேர்தலிலும், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர், 'ஈசான்ய' மூலை சென்டி மென்ட் காரணமாக, கானத்துாரில் நாளைதேர்தல் பிரசாரத்தைதுவக்குகிறார்.

