/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எச்சூரில் பாதை விவகாரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
/
எச்சூரில் பாதை விவகாரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
எச்சூரில் பாதை விவகாரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
எச்சூரில் பாதை விவகாரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 03, 2024 05:04 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த எச்சூர் பகுதியில், செல்லியம்மன் கோவில் குறுக்குத் தெரு உள்ளது. இப்பகுதியில், பிரதான சாலைக்கு சற்று உட்புறமாக, சில குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
வீட்டுப் பகுதிக்கும்,பிரதான சாலைக்கும் இடையேயுள்ள மண் பாதையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, காலி மனையின் உரிமையாளர், வீடு கட்ட முடிவெடுத்து, அப்பாதை தனக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன், பாதையை மறித்து தடுப்பு அமைத்தார். அக்குடும்பத்தினர் பாதையை பயன்படுத்த முடியாமல், வேறொருவர் இடம் வழியே செல்கின்றனர்.
பாதை விவகாரம் குறித்து, வருவாய்த் துறையிடம் முறையிட்ட நிலையில், தீர்வு காணப்படாததால், நேற்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உயரதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து தீர்வு காண்பதாக, கிராம நிர்வாக அலுவலர் பரத் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.