/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் கழிவுநீர்
/
அச்சிறுபாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் கழிவுநீர்
அச்சிறுபாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் கழிவுநீர்
அச்சிறுபாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் கழிவுநீர்
ADDED : ஆக 21, 2024 09:06 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், மிகப்பழமையான முத்தாலம்மன் கோவில் உள்ளது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, அச்சிறுபாக்கம் டவுன் பகுதிக்கு செல்லும் சாலை ஓரம், நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அமைந்துள்ள பகுதி, மிகவும் பள்ளமாக உள்ளதால், மழைக் காலங்களில் மழை நீரோடு கழிவுநீர் சேர்ந்து, கோவில் வளாகத்தில், 2 அடி உயரம் வரை தேங்கி நிற்கிறது.
இதனால், கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து வருகிறது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், கோவில் பகுதியை ஆய்வு செய்து, கோவில் வளாகத்தில் கழிவுநீர் தேங்காதவாறு, கால்வாய்கள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

