ADDED : ஜூலை 04, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துலுக்காணம், 55. திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ள கோவிலுக்கு,நடந்து சென்றார்.
வீட்டிற்கு செல்ல, கோவிலின் எதிரே சாலையை கடக்க முயன்ற போது, செங்கல்பட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 'எய்ச்சர்' சரக்கு வாகனம், துலுக்காணம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.