ADDED : செப் 05, 2024 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 52. இவர், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு, மேலகுப்பம் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதே இடத்தில் இறந்தார்.
இதுகுறித்து, அவரின் உறவினர் கேசவன், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.