/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சைக்கிளில் பஸ் மோதி முதியவர் பலி
/
சைக்கிளில் பஸ் மோதி முதியவர் பலி
ADDED : ஆக 20, 2024 08:15 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி, 58. பால் வியாபாரத்திற்காக திருக்கழுக்குன்றம் சென்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், காலை 7:30 மணிக்கு சென்றபோது, பின்னால் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் செல்லும் பேருந்து, மணியின் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், மணியின் உடலை உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மணியின் மகன் முருகன் அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.