/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
/
பொது விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
பொது விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
பொது விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
ADDED : மார் 08, 2025 11:54 PM
மாமல்லபுரம், சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து, 64. ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் ஆட்டோவில், மனைவி கஸ்துாரி, 55, என்பவருடன் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
அதே ஆட்டோவில் மனைவியுடன், மாலை சென்னை திரும்பினார்.
வடநெம்மேலி பகுதியில், மாலை 6:30 மணியளவில் கடந்த போது, சாலையோரம் நின்றிருந்த கார் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால், இவர் சாலையின் மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பின்னால் வந்த கார், ஆட்டோவில் மோதி, தம்பதி காயமடைந்தனர்.
அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 3:30 மணியளவில், அல்லிமுத்து இறந்தார்.
கஸ்துாரி சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.