/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசியல் கட்சியினர் நிகழ்வு விதிமீறல்கள் தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு
/
அரசியல் கட்சியினர் நிகழ்வு விதிமீறல்கள் தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு
அரசியல் கட்சியினர் நிகழ்வு விதிமீறல்கள் தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு
அரசியல் கட்சியினர் நிகழ்வு விதிமீறல்கள் தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு
ADDED : மார் 25, 2024 05:57 AM

மாமல்லபுரம், : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
பொதுமக்கள், 50,000 ரூபாய்க்கு மேல், உரிய ஆவணமின்றி பணம் கொண்டு செல்ல, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம், மது கடத்தல், தேர்தல் விதிமீறல்கள் ஆகியவற்றை தடுக்க, நிலையான கண்காணிப்புக் குழு, பறக்கும் படை நியமித்து கண்காணிக்கிறது.
இந்நிலையில், அரசியல் கட்சியினரின் நிகழ்வுகளையும், ஆணைய வீடியோகிராபர்கள், வீடியோவாக பதிகின்றனர்.
காஞ்சிபுரம் தனித்தொகுதி அரசியல் கட்சி வேட்பாளர்கள், காஞ்சிபுரம் கலெக்டரிடமும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி வேட்பாளர்கள், செங்கல்பட்டு கலெக்டரிடமும், இன்று வேட்புமனு அளிக்கலாம் என தெரிகிறது.
காஞ்சிபுரத்தின் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்கள், கடந்த சில நாட்களாக, தொகுதியின் முக்கிய இடங்களில், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்தனர்.
நிர்வாகிகள், அவர்களை வரவேற்று மாலை அணிவிப்பது, பட்டாசு வெடிப்பது, எவ்வளவு பேர் கூடியது, வேட்பாளர் வாகனத்தை, கட்சியினர் வாகனங்கள் அணிவகுத்து பின்தொடர்வது உள்ளிட்ட நிகழ்வுகளை, தேர்தல் ஆணைய வீடியோகிராபர்கள் வீடியோ பதிந்தனர்.
இன்று வேட்புமனு அளிக்கும்போது, வேட்பாளர்கள், முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, வேட்பாளரை பிரமாண்ட வரவேற்புடன், பேரணியாக வேட்பு மனு தாக்கலுக்கு அழைத்துச்செல்வது உள்ளிட்ட நிகழ்வுகள், தேர்தல் விதிமீறல்களையும் வீடியோவாக பதியப்படும்.
வேட்புமனு அளித்தபின், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் பகுதியில், பிரசார பொதுக்கூட்டம், மேடை, ஒலி ஒளி அமைப்பு, கொடிகள் பறக்கவிடுதல், வாகனங்கள் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை கண்காணித்து, தேர்தல் விதிமீறலை, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவும் வீடியோ பதியப்படும்.

