/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள்
/
பராமரிப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள்
ADDED : ஏப் 12, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி குபேரன் நகர்அருகில் சில நாட்களாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, அப் பகுதி மக்களின்புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி மின் வாரிய உதவி செயற் பொறியாளர்உத்தரவின்படி,மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது,சுட்டெரிக்கும்வெயில் காரணமாக, மின் ஒயர்கள் மற்றும் மின் கம்பிகள் தீப்பிடித்தது தெரிய வந்தது.
இதனால் ஏற்படும் மின்தடையைதடுக்கும் விதமாக,சுற்றுவட்டார பகுதிகளில் சேதமானமின் கம்பிகள் மற்றும் மின் ஒயர்களை பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

