/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ - மெயிலில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
இ - மெயிலில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 12, 2024 11:44 PM
சென்னை : சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று காலை வந்த இ- மெயிலில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில், பள்ளியின் நிர்வாக மேலாளர் சந்தோஷ் புகார் அளித்தார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் வீரா, ஜூடி உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் ஐ.டி.,யின் வாயிலாக அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.இதேபோன்று கடந்த ஜூலை, 17 மற்றும் ஆக., 5ம் தேதியும் வெவ்வேறு இ-மெயில் வாயிலாக, இந்த பள்ளிக்கு மர்மநபர்கள் இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.