/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அவசியம்
/
கூவத்துார் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அவசியம்
கூவத்துார் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அவசியம்
கூவத்துார் சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அவசியம்
ADDED : மார் 02, 2025 11:26 PM
கூவத்துார், கூவத்துார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
இது கடலுார், தென்பட்டினம், வேப்பஞ்சேரி, நெற்குணப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின், பிரதான ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
இதன் வாயிலாக 15,000க்கும் மேற்பட்ட மக்கள் பொது மருத்துவம், மகப்பேறு, அவசர சிகிச்சை, நோய்த்தடுப்பு என, பல்வேறு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில், அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
விபத்தில் சிக்கி பலத்த காயமடைவோரை, அவசர சிகிச்சைக்கு 40 கி.மீ., தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது.
நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளதால், செல்லும் வழியிலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது கிழக்கு கடற்கரைச் சாலை நான்கு வழிசாலையாக மாற்றப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இருந்து கடலுார், கும்பகோணம், சிதம்பரம் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு, அதிக அளவில் வாகனங்கள் செல்லும்.
இதனால், மேலும் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், கூவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.