/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச சோத்துப்பாக்கத்தில் வலியுறுத்தல்
/
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச சோத்துப்பாக்கத்தில் வலியுறுத்தல்
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச சோத்துப்பாக்கத்தில் வலியுறுத்தல்
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச சோத்துப்பாக்கத்தில் வலியுறுத்தல்
ADDED : மே 17, 2024 12:50 AM
மதுராந்தகம்:சோத்துப்பாக்கத்தில் இருந்து ராமாபுரம் காப்புக்காடு வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசவும், எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
வந்தவாசி- - சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, ராமாபுரம் காப்புக்காடு வழியாக, எல்.எண்டத்துார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், கீழாமூர், செம்பூண்டி, எல்.எண்டத்துார், கிளியா நகர் உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இச்சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணப்பூச்சும், எச்சரிக்கை பலகைகளும் இல்லை. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள், இப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வேகத்தடைகளில் வர்ணம் பூசவும், இரவில் ஒளிரும் எதிரொலிப்பான் ஸ்டிக்கர்கள் அமைக்கவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

