/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
/
பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 01, 2024 11:45 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை, வரும் 5, 6 தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்துகிறது.
இதில், பிளஸ் 2, பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்ற, 19 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, மாத சம்பளம் 19,629 ரூபாய் மற்றும் உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு, 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டு, நியமன கடிதம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044- - 2742 6020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.