/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் அடிபட்டு இன்ஜினியர் பலி
/
ரயிலில் அடிபட்டு இன்ஜினியர் பலி
ADDED : மே 29, 2024 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்:ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் பில்லி தரணி சத்யா, 23. பெருங்களத்துாரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல், வேலைக்கு செல்வதற்காக மொபைல் போனில் பேசியபடியே, பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அந்தோதயா விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.