/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.1.06 லட்சம் மதிப்பு இங்கிலாந்து கரன்சி பறிமுதல்
/
ரூ.1.06 லட்சம் மதிப்பு இங்கிலாந்து கரன்சி பறிமுதல்
ரூ.1.06 லட்சம் மதிப்பு இங்கிலாந்து கரன்சி பறிமுதல்
ரூ.1.06 லட்சம் மதிப்பு இங்கிலாந்து கரன்சி பறிமுதல்
ADDED : மார் 21, 2024 10:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், நேற்று அதிகாலை 3:20 மணிக்கு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
இதில், பயணித்த ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரிடம், இங்கிலாந்து நாட்டின் கரன்சியான 1,000 பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுகள், உரிய ஆவணமின்றி வைத்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து, இந்திய ரூபாயில் 1.06 லட்சம் மதிப்புடைய, 1,000 பிரிட்டிஷ் பவுண்ட் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.