/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்
/
வீடு புகுந்து 9 சவரன் நகை அபேஸ்
ADDED : மார் 28, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 50.நேற்று முன்தினம் வயலுக்குச் சென்று, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின்படி, அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.