/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள்
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள்
ADDED : பிப் 25, 2025 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், மதுவிலக்கு காவல் நிலையம் அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
4-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 17 ஆண், 13 பெண் என, 30 குழந்தைகள் உள்ளனர்.
இங்கு நேற்று, 4வது வார்டு கவுன்சிலர் பிரியங்கா ஏற்பாட்டில், மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
மரகதம் தலைமையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சேர், எழுது பொருட்கள் மற்றும் பாய், தலையணை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பேரூராட்சி அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

