/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடுப்புகள் இல்லாமல் விரிவாக்கப்பணி இ.சி.ஆர்., சாலையில் விபத்து அபாயம்
/
தடுப்புகள் இல்லாமல் விரிவாக்கப்பணி இ.சி.ஆர்., சாலையில் விபத்து அபாயம்
தடுப்புகள் இல்லாமல் விரிவாக்கப்பணி இ.சி.ஆர்., சாலையில் விபத்து அபாயம்
தடுப்புகள் இல்லாமல் விரிவாக்கப்பணி இ.சி.ஆர்., சாலையில் விபத்து அபாயம்
ADDED : மே 02, 2024 01:21 AM

செய்யூர்:மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- முகையூர் மற்றும் முகையூர் -- மரக்காணம் இடையே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அடுத்த கட்டமாக, மரக்காணம் -- புதுச்சேரி இடையிலான பகுதி மேம்படுத்தப்பட உள்ளது.
இச்சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தற்போது சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், எச்சரிக்கை பலகை மற்றும் எந்தவித பாதுகாப்பு தடுப்பும் இல்லாமல் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் வேகமாக செல்லும் வாகனங்கள், சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் கனரக வாகனங்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்து, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

