/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
அச்சிறுபாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 17, 2024 11:46 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், பயணியர் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு, பேருந்து பயணியர் காயமுற்றனர்.
இதனை தவிர்க்கும் விதமாக, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக பயணியர் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
கோடை வெயிலின் காரணமாக, பயணியரின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, துணியால் ஆன நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது, துணி காற்றில்பறந்து கிழிந்து வீணானதால், அவை அப்புறப்படுத்தப்பட்டன. தற்போது, நிழற்குடை இல்லாததால், பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர், பெண்கள் மற்றும் முதியோர், கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், பயணியரின் நலன் கருதி, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.