/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆலத்துார் சிட்கோவில் எதிர்பார்ப்பு
/
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆலத்துார் சிட்கோவில் எதிர்பார்ப்பு
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆலத்துார் சிட்கோவில் எதிர்பார்ப்பு
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆலத்துார் சிட்கோவில் எதிர்பார்ப்பு
ADDED : செப் 04, 2024 01:42 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், 400 ஏக்கரில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டதால், குறுகிய காலத்திலேயே, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு வந்தன.
தற்போது, இத்தொழிற்பேட்டையில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
இத்தொழிற்பேட்டையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய்கள் துார்ந்து, அடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், சில இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
சாலையோரம் மின் விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
தொழிற்பேட்டை வளாகத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தபால் நிலையம், புறக்காவல் நிலையம், மருத்துவ மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை.
எனவே, பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இயங்கும் இத்தொழிற்பேட்டையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தொழிற்பேட்டை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.