/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது சுகாதார வளாகம் அமைக்க காட்டுதேவாத்துாரில் எதிர்பார்ப்பு
/
பொது சுகாதார வளாகம் அமைக்க காட்டுதேவாத்துாரில் எதிர்பார்ப்பு
பொது சுகாதார வளாகம் அமைக்க காட்டுதேவாத்துாரில் எதிர்பார்ப்பு
பொது சுகாதார வளாகம் அமைக்க காட்டுதேவாத்துாரில் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 09, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர், சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் ஊராட்சியில், செய்யூர் - சித்தாமூர் சாலை ஓரத்தில், பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.
சில நாட்கள், அப்பகுதி மக்கள் அதை பயன்படுத்தி வந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால், பொது சுகாதார வளாகம் புதர்மண்டி காணப் பட்டது.
இதையடுத்து, சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால், சில மாதங்களுக்கு முன் அந்த சுகாதார வளாகம் இடித்து அகற்றப்பட்டது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், புதிய பொது சுகாதார வளாகம் அமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.