/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளில் மூழ்கிய சாலை சந்திப்பு மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு
/
இருளில் மூழ்கிய சாலை சந்திப்பு மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு
இருளில் மூழ்கிய சாலை சந்திப்பு மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு
இருளில் மூழ்கிய சாலை சந்திப்பு மின்விளக்கு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 17, 2024 08:00 PM
செய்யூர்:செய்யூர் அருகே சித்தாற்காடு கிராமத்தில், செய்யூர் - போந்துார் சாலை மற்றும் நல்லுார் - வில்லிப்பாக்கம் சாலை சந்திக்கும் முக்கிய சந்திப்பு உள்ளது.
இந்த சாலை சந்திப்பை, வெடால், நாங்களத்துார், அமந்தங்கரணை, பாளையூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்து செல்கின்றனர்.
மேலும், தினசரி சாலை சந்திப்பில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால், சந்திப்பு பகுதியில் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. அதனால், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
அதனால், சாலை சந்திப்பை கடந்து செல்ல, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை சந்திப்பில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.