/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் பயோ டீசல் நிறுவனத்தின் காலாவதி மெத்தனால் கலனிற்கு 'சீல்'
/
தனியார் பயோ டீசல் நிறுவனத்தின் காலாவதி மெத்தனால் கலனிற்கு 'சீல்'
தனியார் பயோ டீசல் நிறுவனத்தின் காலாவதி மெத்தனால் கலனிற்கு 'சீல்'
தனியார் பயோ டீசல் நிறுவனத்தின் காலாவதி மெத்தனால் கலனிற்கு 'சீல்'
ADDED : ஜூலை 12, 2024 01:32 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள நடுவக்கரை பகுதியில், 'புரோல்ஜென் பயோடெக் லிமிடெட்' என்ற நிறுவனம், பாசி உயிரி தொழில்நுட்பத்தில் ஊட்டச்சத்து மருந்து தயாரித்து வந்தது. இங்கு 15,000 லிட்டர் கொள்ளளவில் மெத்தனால் இருப்பு வைக்கும் கலன்கள் உள்ளன.
இந்நிறுவனம் உற்பத்தியை கைவிட்டு,தற்போது 'யாத்ரா' என்ற வேறு நிறுவனம் இயங்குகிறது.
இந்த புதிய நிறுவனம், பயோ டீசல் உற்பத்தி செய்கிறது. இதற்காக மெத்தனால் இருப்பு வைக்க, புதிய கலன்கள் பயன்படுத்தி வருகிறது.
முந்தைய நிறுவனம், அதன் பழைய மெத்தனால் இருப்பு கலன்களை, பயன்பாட்டிலிருந்து கைவிட்டதாக அரசிடம் தெரிவித்து, அதற்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட சாராய இறப்பிற்கு காரணம், மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியது என தெரிந்தது.
மேலும், செயல் படாத பெட்ரோல் பங்கில் உள்ள கலனில், மெத்தனால் பதுக்கியதும் தெரியவந்தது.
இச்சூழலில், நடுவக்கரை நிறுவனத்தில், கைவிடப்பட்ட மெத்தனால் கலன்களை பரிசோதித்து, 'சீல்' வைக்குமாறு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு, தாசில்தார் ராதாவுடன் அங்கு ஆய்வு செய்தார். வெற்று கலன் என உறுதி செய்து, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து, கலால் ஆணையர் கூறுகையில், “முந்தைய நிறுவனம், மெத்தனால் கலன்களை கைவிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. 2017க்கு பின், உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. அதில், மீண்டும் மெத்தனால் நிரப்பாமல்தவிர்க்கவே, 'சீல்' வைத்தோம்,” என்றார்.