/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நியாய விலை கடை ஆத்துாரில் திறப்பு
/
நியாய விலை கடை ஆத்துாரில் திறப்பு
ADDED : பிப் 27, 2025 11:53 PM
மறைமலைநகர்,
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி வடபாதி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வடபாதி கிராமத்தில் நியாய விலைக் கடை இல்லாததால் 2 கி.மீ., துாரத்தில் உள்ள ஆத்துார் நியாய விலைக் கடைக்கு சென்று அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பகுதிவாசிகள் வாங்கி வந்தனர்.
இதனால், வடபாதி கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, வடபாதி அங்கன்வாடி மையம் எதிரே உள்ள காலி இடத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 - -24ன் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நியாய விலைக் கடை திறக்கப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து நம் நாளிதழில், கடந்த டிச., மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நியாய விலைக் கடை திறப்பு விழா, நேற்று காலை நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.
இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.