/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் விழுந்து கிடக்கும் 'பேரிகார்டு'கள் மதுராந்தகம் சுற்றுப்பகுதியில் விபத்து அபாயம்
/
சாலையில் விழுந்து கிடக்கும் 'பேரிகார்டு'கள் மதுராந்தகம் சுற்றுப்பகுதியில் விபத்து அபாயம்
சாலையில் விழுந்து கிடக்கும் 'பேரிகார்டு'கள் மதுராந்தகம் சுற்றுப்பகுதியில் விபத்து அபாயம்
சாலையில் விழுந்து கிடக்கும் 'பேரிகார்டு'கள் மதுராந்தகம் சுற்றுப்பகுதியில் விபத்து அபாயம்
ADDED : செப் 01, 2024 11:54 PM

மதுராந்தகம் : பரனுார் சுங்கச்சாவடியில் இருந்து, அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரையிலான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர், புக்கத்துறை, படாளம், மேலவளம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் சாலைகள் உள்ளன.
இப்பிரிவு பகுதிகளில், வாகனங்களின் வேகத்தை குறைத்து செல்லவும், சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் வாயிலாக விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், தனியார் உணவகங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு பங்களிப்புடன், சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன.
தனியார் பங்களிப்புடன், போக்குவரத்து போலீசாரின் முயற்சியால், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன.
தற்போது, பேரிகார்டுகள் சேதம் அடைந்து, பயன்பாடின்றி சாலை ஓரங்களில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக செல்லும் வாகனங்களின் காற்றின் வேகத்தால், சாலையின் மைய தடுப்பில் வைக்கப்பட்ட பேரிகார்டுகள், அவ்வப்போது சாலையில் விழுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன.
சாலையின் விபத்து பகுதிகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், பேரிகார்டுகள் அன்பளிப்பாக அளிக்கும் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பெயர்களை அச்சிடுவதற்காக, பேரிகார்டுகளின் மையப் பகுதிகளில், முழுதும் மறைக்கும் அளவிற்கு, குறிப்பிட்ட அளவிற்கு இரும்பு தகடுகளால் வடிவமைக்கின்றனர். இதனால், வாகனங்களின் வேகம் மற்றும் காற்று வீசும் நேரங்களில், பேரிகார்டுகளில் காற்று தடுப்பு ஏற்பட்டு, காற்றின் வேகத்தால், எதிர்பாராத தருணங்களில் சாலையில் கீழே விழுகின்றன.
மேலும், எதிர் திசையில் வரும் வாகனங்களின் ஒளி தெரியாதவாறு, தனியார் நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள, இரும்பு தகடுகள் மறைக்கின்றன.
இரும்பு சட்டங்கள் வாயிலாக, காற்று உள்புகுந்து செல்லும் வகையில் மாற்றம் செய்து பேரிகார்டுகள் அமைக்கப்பட வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.