/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் தீப்பற்றிய கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பம்
/
மதுராந்தகத்தில் தீப்பற்றிய கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பம்
மதுராந்தகத்தில் தீப்பற்றிய கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பம்
மதுராந்தகத்தில் தீப்பற்றிய கார் அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பம்
ADDED : மார் 02, 2025 11:35 PM

மதுராந்தகம், சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன், 50. இவர் நேற்று, மனைவி மற்றும் மகளுடன், அவருக்குச் சொந்தமான 'ஹூண்டாய் ஐடென்' காரில் திருவண்ணாமலை சென்று, மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வந்தார்.
மதுராந்தகம் ஏரிக்கரை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, காரின் டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறி, மறுமார்க்கத்தில் சாலையில் கார் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்து உடனடியாக ஜீவன் மற்றும் அவரது மனைவி மகள் இறங்கினர்.
உடனே, திடீரென கார் தீப்பற்றி எரியத் துவங்கியது.
தகவலின்படி வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
காரில் பயணித்த ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.