/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேவாதுார் ஓடையில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
தேவாதுார் ஓடையில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவாதுார் ஓடையில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவாதுார் ஓடையில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 03, 2024 01:30 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே உள்ள ஜமீன்எண்டத்துார், கீரல்வாடி, மாரிபுத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், தேவாதுார் ஓடை வழியாக, வயல்வெளிகளின் நடுவே சென்று, கிளியாற்றில் இணைந்து, இறுதியாக பாலாற்றில் சேர்ந்து கடலில் கலக்கிறது.
இந்த உபரிநீர் கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது. 20 கி.மீ., நீளமுடைய இந்த கால்வாய், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த கால்வாய், இப்பகுதியில் உள்ள வயல்வெளிகளின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது. கால்வாய் வாயிலாக, 3,000த்துக்கும்மேற்பட்ட ஏக்கர்பரப்பளவு விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.
சில மாதங்களுக்கு முன், ஓடை சீரமைக்கப்பட்டது, இதனால், மழைகாலத்தில் தடையின்றி தண்ணீர் செல்கிறது. மழைக்காலத்தில் அதிகப்படியான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதால், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, கால்வாய் நடுவே தடுப்பணைகள் அமைத்து, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.