/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் ஏரியில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு
/
ஆலத்துார் ஏரியில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஆக 02, 2024 02:48 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மண் எடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் பணிக்காக பயன்படுத்த, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு, தனியார் ஒப்பந்ததாரரிடம் 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
ஏரியில் மண் எடுக்கும் பணியை துவங்க பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு, பொக்லை இயந்திரங்கள், லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதை அறிந்த அப்பகுதிவாசிகள், சம்பவ இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு, விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளதாகவும், தற்போது, ஏரியில் 80 சதவீதம் மழை நீர் உள்ளதாகவும் கூறி, ஏரியில் மண் எடுக்க அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலை, பல ஆண்டுகளுக்கு பின் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மண் அள்ளிச் செல்லும் கனரக வாகனங்கள் கடந்தால், இந்த சாலையும் நாசமாகிவிடும்.
அதேபோல், சிறுதாவூர் - -ஆலத்துார் குறுகிய சாலையில் லாரி சென்றால் விபத்து ஏற்படும் எனவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மண் எடுக்கும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.