/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கொண்டங்கி ஏரி மதகு பழுது சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 10:08 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், சப்- கலெக்டர் பயிற்சி மாலதி ெஹலன் தலைமையில், நேற்று நடந்தது.
விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:
படாளம் ரயில்வே கடவுபாதையை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். ரயில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், கடவுபாதை அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். ரயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்.
செங்கல்பட்டு - திருப்போரூர் வரை 13 கி.மீ., துாரம் வனத்துறை பகுதியில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளனர். இந்த சாலையில், முட்செடிகள் வளர்ந்துள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.
கரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் மருந்துகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொண்டங்கி ஏரி மதகு பழுதடைந்துள்ளது. பாசன கால்வாய்கள், துார்ந்துள்ளதை, நீர்வளத்துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.