/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி நீர்ப்பாசன கால்வாய்களை மீட்க புதுப்பட்டு விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : செப் 17, 2024 11:29 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியே, அப்பகுதி விவசாய நிலங்களின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது.
ஏரியின் நீர் வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. ஏரியில் இருந்து மதகுகள் வாயிலாக வெளியேறும் நீர், பாசன கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு சென்றடைகிறது.
இந்நிலையில், பல இடங்களில் பாசனக் கால்வாய்களை ஆக்கிரமித்து, தனிநபர்கள் சிலர் விவசாயம் செய்து வருவதால், கடை மடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாசனக் கால்வாய்களை மீட்க வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கால்வாயை மீட்டு, பாசனக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.