sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் ரகளை செய்த மகன் அடித்துக்கொன்ற தந்தை, தம்பி கைது

/

போதையில் ரகளை செய்த மகன் அடித்துக்கொன்ற தந்தை, தம்பி கைது

போதையில் ரகளை செய்த மகன் அடித்துக்கொன்ற தந்தை, தம்பி கைது

போதையில் ரகளை செய்த மகன் அடித்துக்கொன்ற தந்தை, தம்பி கைது


ADDED : ஜூன் 25, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல் : மது போதையில் தகராறு செய்த மூத்த மகனை, கொலை செய்து, இயற்கை மரணம் என நாடகமாடிய தந்தை மற்றும் இன்னொரு மகன் கைது செய்யப்பட்டனர்.

வானகரம், மேட்டுக்குப்பம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆசைமணி, 60. இவரது மூத்த மகன் விஜய், 35. இளைய மகன் அஜய், 26.

விஜய்க்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். தினமும் போதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 21 ம் தேதி இரவும் போதையில் வந்து தகராறு செய்ததோடு, சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என ரகளை செய்தார். இதனால், ஆத்திரமடைந்த ஆசைமணியும், இன்னொரு மகன் அஜயும் சேர்ந்து விஜயை கட்டையால் அடித்துள்ளனர். விஜய் மேலும் ஆக்ரோஷமானதால், அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இறந்து போன விஜயின் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர்.

விஜய் குடிகாரர் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், போதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் நம்பி, இறுதி சடங்குக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து, விஜய் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எடுத்துச் சென்று போரூர் செட்டியார் அகரம் சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

ஆனால், இந்நிலையில் விஐய் மரணத்தில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் இருந்தது. இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பூபதி ராஜுக்கு தகவல் கிடைத்தது. அவர் ஆசைமணி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தார். அப்போது, விஜயை, தந்தை ஆசைமணியும், இன்னொரு மகன் அஜயும் சேர்ந்து கொலை செய்தது உறுதியானது.

இருவரையும் கைது செய்த போலீசார், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த உறவினர்கள், வானகரம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தங்கமணி, 58, சிமியோன், 40, அருண் குமார், 37, போரூர் அலங்கார் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற ஜோயல், 21 ஆகியோரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us