/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பேக்கரியில் தீ விபத்து
/
திருப்போரூர் பேக்கரியில் தீ விபத்து
ADDED : ஆக 06, 2024 12:07 AM
திருப்போரூர்:திருப்போரூர் கிரவலப் பாதையில், பேக்கரி கடை உள்ளது. இந்த கடை, கான்கிரீட் தளம் கொண்ட கட்டடத்துடன் இணைத்து, இரும்பு தகர ஷீட்டால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரும்பு தகர ஷீட் அறையில், நேற்று காலை 11:00 மணிக்கு, அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது, அருகே இருந்த மர விறகு மற்றும் எண்ணெய்த் திட்டுக்கள் படிந்த பகுதிகளில் தீப்பற்றி, வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனே, அருகே இருந்த பொதுமக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை மக்களே முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்ததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
மேலும், இந்த தீ விபத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்த விபத்து குறித்து, புகார் ஏதும் பதிவாகவில்லை.