/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 17, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:தீ தொண்டு வாரமாக, ஏப்., 14ம் தேதி முதல்,21ம் தேதி வரை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கடைபிடித்து வருகின்றனர்.
இதையடுத்து, மணமை தனியார் மேலாண்மைகல்லுாரியில், அதன் செக்யூரிட்டிகள் மற்றும் ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் ஆகியோருக்கு, இதுகுறித்து நேற்று விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டால்,சாக்கு, மணல், தண்ணீர் ஆகியவற்றால் அணைக்கும் முறைகள் குறித்து விளக்கி, மாமல்லபுரம்தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் மேற்பார்வையில், தீயணைப்பு வீரர்கள் பயிற்சிஅளித்தனர்.
தீ விபத்து ஏற்படுவதை தவிர்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து, துண்டு பிரசுரங்கள்வழங்கினர்.

