ADDED : செப் 03, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 43. நேற்று முன்தினம், படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, காலை 8:30 மணிக்கு, கரைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது படகு கவிழ்ந்து, மோட்டார் விசிறியில் சிக்கி, மூக்கு, தாடை ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சசிகுமாருடன் சென்றவர்கள் அவரை மீட்டு, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.