/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்து காலத்தில் மக்களை காக்கும் கடவுள் தான் மீனவர்கள்: உதயநிதி
/
ஆபத்து காலத்தில் மக்களை காக்கும் கடவுள் தான் மீனவர்கள்: உதயநிதி
ஆபத்து காலத்தில் மக்களை காக்கும் கடவுள் தான் மீனவர்கள்: உதயநிதி
ஆபத்து காலத்தில் மக்களை காக்கும் கடவுள் தான் மீனவர்கள்: உதயநிதி
ADDED : மார் 09, 2025 11:52 PM

சென்னை, மார்ச் 10-
''புயல், மழையின்போது மக்களை காக்கும் மீனவர்களை கடவுளாக பார்க்கிறேன்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம் கடலில், படகு போட்டி நடந்தது. இதல், 13 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள், 52 துடுப்பு படகுடன் போட்டியில் பங்கேற்றனர்.
கடலில், 4 கி.மீ., துாரத்தில் இருந்து கரையை நோக்கி சென்றனர். துணை முதல்வர் உதயநிதி, கடலில் ஏறிச் சென்று போட்டியை துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, படகு, மீன்பிடி வலைகள் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவில் உதயநிதி பேசியதாவது:
படகு போட்டி நடத்தும், 194வது வார்டு வட்ட செயலர் கர்ணா, தி.மு.க.,வை சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தலில், அவரது மனைவி விமலாவுக்கு சீட் கேட்டார். பல்வேறு காரணங்களால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
மற்றொரு தி.மு.க., வேட்பாளருக்கு சீட் வழங்கப்பட்டது.
ஆனால், சுயேச்சையாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு, விமலா கர்ணா மக்கள் செல்வாக்குடன் உள்ளார். வென்ற பின் தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். அவரை பாராட்டுகிறேன். அரசு மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
எப்போது புயல், மழை வந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை காக்க மீனவர்கள் உதவுவர். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், மக்களை காக்கும் மனமுடைய மீனவர்களை, கடவுளாக பார்க்கிறேன். எது சரி, எது தவறு என தைரியமாக பேசக்கூடியவர்கள் மீனவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டலக்குழு தலைவர் மதியழகன், 194வது வார்டு கவுன்சிலர் விமலா கர்ணா, வட்ட செயலர் கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.