/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாட்டுப்புற கலைகள் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
நாட்டுப்புற கலைகள் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 02, 2024 10:49 PM
மாமல்லபுரம்:தமிழகத்தில் பழங்காலம் முதல், கரகம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கும்மி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
தற்காலத்தில் அரிதாகி வரும் அவற்றை பாதுகாக்கவும், வருங்கால தலைமுறை யினரிடம் அவற்றின் சிறப்பியல்புகளை கொண்டு செல்லவும், கலை பண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு கவின்கலை கல்லுாரிகள், இசை கல்லுாரி கள், மாவட்ட இசைப்பள்ளிகள் ஆகியவற்றில், இக்கலைகளை பகுதி நேரமாக பயிற்றுவிக்க உள்ளது.
ஜூலை 12ம் தேதி இப்பயிற்சி துவங்குகிறது. மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், கிராமியநடனம், சிலம்பாட்டம், நாடகம், பாவைக்கூத்து ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படும்.
ஓராண்டிற்கு, வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில், மாலை 4:00 - 6:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி முடிந்ததும், தேர்வு நடத்தி சான்றிதழ் அளிக்கப்படும்.
எட்டாம் வகுப்பிற்கு குறைவான கல்வித் தகுதியுள்ளவர்களும் சேர்க்கப்படுவர். அவர்கள் தேர்வில் பங்கேற்க இயலாது. சான்றிதழும் வழங்கப்படாது.
பயிற்சிக் கட்டணம் 500 ரூபாய். நேற்று முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஜூலை 11ம் தேதி வரை, அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73586 28242 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.