/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பார்முலா - 4 கார் ரேஸில் மாமல்லை வீரர் ராகுல்
/
பார்முலா - 4 கார் ரேஸில் மாமல்லை வீரர் ராகுல்
ADDED : செப் 01, 2024 11:40 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தைச் சேர்ந்த தம்பதி ரங்கசாமி - இந்திராகாந்தி தம்பதியின் மகன் ராகுல், 31. கார் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர், எட்டு வயது முதல் பயிற்சிபெற்று, ரேஸ் வீரராக திகழ்கிறார். பல்வேறு ரேஸ் பந்தயங்களில் பங்கேற்று, 9 முறை தேசிய சாம்பியனாக வென்றுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரமோட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து, சென்னையில், பார்முலா - 4 கார் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்று, ஆக., 24ம், 25ம் தேதிகளில், சென்னை இருங்காட்டுக்கோட்டையில் நடந்தது.
அடுத்த சுற்று, சென்னை மாநகர் தீவுத்திடல் பகுதியில், நேற்று நடந்தது. மாமல்லபுரம் வீரர் ராகுல், இப்போட்டிகளில் பங்கேற்றார். அடுத்த சுற்றாக, கோயம்புத்துாரில், செப்., 13 - 15ம் தேதிகளில் நடக்கவுள்ள போட்டிகளில் பங்கேற்கிறார்.