/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் இ.சி.ஆரில் நான்கு பேர் கைது
/
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் இ.சி.ஆரில் நான்கு பேர் கைது
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் இ.சி.ஆரில் நான்கு பேர் கைது
அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் இ.சி.ஆரில் நான்கு பேர் கைது
ADDED : மே 28, 2024 06:33 AM

புதுப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம், புதுச்சேரி சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் மாலை, சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில் வந்த வாலிபர், மூட்டையுடன் கீழே இறங்கினார்.
அப்போது, அங்கிருந்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்தனர்.
அதில் அவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாலா ஜோஷி, 35, என்பதும், அங்கிருந்து தலா ஒரு கிலோ வீதம், ஆறு சிறிய மூட்டைகளில், ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில் கல்பாக்கம் சென்றதும் தெரிந்தது.
கூவத்துார், நாவக்காலைச் சேர்ந்த கதிர்வேல், 27, என்பவர், அவரை அழைத்துச் செல்ல, இருசக்கர வாகனத்தில் காத்திருந்ததும் தெரிந்தது.
அதே நாள் இரவு, புதுப்பட்டினம், பழைய கிராம நிர்வாக அலுவலக பகுதி சந்திப்பில் இறைச்சி கடை நடத்தும் சதாம் உசேன், 30, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராவுதீன் மகன் பூரான், 19, ஆகியோர், இருசக்கர வாகனத்தில், 1.6 கிலோ கஞ்சா கடத்தி, போலீசாரிடம் பிடிபட்டனர். இரண்டு தரப்பினரும், வெளிமாநில பகுதிகளிலிருந்து கஞ்சா வரவழைத்து, கல்பாக்கம், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், சில்லறையில் விற்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார், நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றினர். இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.