/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபர்களை தாக்கி பணம் பறிப்பு சிறார்கள் உட்பட நால்வர் கைது
/
வாலிபர்களை தாக்கி பணம் பறிப்பு சிறார்கள் உட்பட நால்வர் கைது
வாலிபர்களை தாக்கி பணம் பறிப்பு சிறார்கள் உட்பட நால்வர் கைது
வாலிபர்களை தாக்கி பணம் பறிப்பு சிறார்கள் உட்பட நால்வர் கைது
ADDED : செப் 04, 2024 01:35 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பனங்கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 24. இவரது நண்பர் கூடலுார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர், 21. நேற்று முன்தினம் இரவு, பனங்கொட்டூரில் இருந்து மறைமலை நகருக்கு சென்றனர்.
மறைமலை நகர் சாமியார் கேட் அருகில், சாலையில் சென்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து தாக்கி, அருகில் வனப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, கத்தியைக் காட்டி மிரட்டி, இருவரின் மொபைல் போனில் இருந்து ஜிபே வாயிலாக, 28,000 ரூபாய் பறித்துக் கொண்டனர். மேலும், கிஷோர் கையில் அணிந்திருந்த, 2 கிராம் தங்க மோதிரம் உள்ளிட்டவற்றையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து, மோகன்ராஜ் மற்றும் கிஷோர், நேற்று காலை மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பேரமனுார் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், 24, மற்றும் அவரது நண்பர்களான சிறார்கள் மூவரை, நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, லோகநாதனை சிறையிலும், சிறுவர்கள் மூவரை சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.