/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குரூப் - 1 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
/
குரூப் - 1 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
குரூப் - 1 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
குரூப் - 1 போட்டி தேர்வுக்கு செங்கையில் இலவச பயிற்சி
ADDED : மே 28, 2024 11:09 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 போட்டித்தேர்வுக்குதயாராகும் பட்டதாரி களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, குரூப் -1 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 20ம் தேதி துவங்கிய இந்த பயிற்சி வகுப்பு, சிறந்த பயிற்றுனர்கள்மற்றும் இலவச 'வைபை' வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கொண்ட நுாலக வசதியும் உள்ளது. இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் புகைப்படம், விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களுடன், செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 044 - -27426020 அல்லது 63834 60933 என்ற தொலைபேசி எண்ணிலும் பதிவு செய்து, வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.