ADDED : ஜூலை 03, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 19 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்த தாலுகாவின் திருக் கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர் மற்றும் பொன்விளைந்தகளத்துார் ஆகிய உள்வட்ட பகுதிகளில், அரசு மேய்க்கால் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசிப்போர், வருவாய்த் துறையினரிடம் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்தனர்.
நான்கு உள்வட்ட பகுதி களிலும், கிராம நத்தம் நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் 19 பேருக்கு, கலெக்டர் அருண்ராஜ், நேற்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதாக, அத்துறையினர் தெரிவித்தனர்.