/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுவாமி தயானந்த பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
/
சுவாமி தயானந்த பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 15, 2024 11:51 PM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் கிராமத்தில் உள்ள சுவாமி தயானந்த ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம், நடந்தது.
காலை 8:30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பள்ளி மாணவ - மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனிதா ரமணி, பள்ளி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
பின், 10:30 மணிக்கு, சென்னை தாகூர் மருத்துவக் கல்லுாரியை சேர்ந்த 40 பேர் கொண்ட மருத்துவர் குழு வாயிலாக, இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், பொது மருத்துவம், ரத்தப்பரிசோதனை, கண் பரிசோதனை, குழந்தைகள் நலம், மகளிர் நலம், எலும்பியல் என, பல்வேறு பிரிவுகளாக முகாம் நடந்தது.
பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், முதியவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் என, 800க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில், 15 பேருக்கு கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டு, அடுத்த சில நாட்களில் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை அளிக்க பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

