/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இலவச வாலிபால் பயிற்சி 150 சிறுவர்களுக்கு உற்சாகம் விளையாட்டு செய்திகள்

ADDED : மே 04, 2024 11:09 PM

சென்னை:நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், ஆண்டுதோறும் கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம் நடத்தப்படும்.
அந்த வகையில், 40வது ஆண்டு, இலவச வாலிபால் பயிற்சி முகாம், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது. முகாமில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 150 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் முகாமை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொது மேலாளர் மெர்சி ரெஜினா துவக்கினார்.
தொடர்ந்து 20ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில், தினமும் முட்டை, கடலை, மற்றும் ஊட்டச்சத்து பாணம் வழங்கப்படுகிறது. நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தங்கசிவன், இந்தியன் வங்கியின் முன்னாள் கைப்பந்து பயிற்சியாளர் சீனிவாசன் மற்றும் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.